STATEMENT BY THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA 44TH SESSION OF THE HUMAN RIGHTS COUNCIL AGENDA ITEM 3: INTERACTIVE DIALOGUE WITH SPECIAL RAPPORTEUR ON THE HUMAN RIGHTS OF MIGRANTS 06 JULY 2020

Jul 12, 2020 | Embassy News

7 July 2020

Madam President,

Sri Lanka welcomes the report presented by the Special Rapporteur on the human rights of migrants.

The contribution of migrant workers to economic growth and development is increasingly becoming critical not only for their own countries, but also as a catalyst for the upward socio-economic mobility in the region and internationally.

We believe that the COVID-19 crisis taught the world that coordinated and concerted efforts are needed to ensure that migrant health is addressed without discrimination throughout the migration cycle. A further consequence of Covid-19 has been the shrinking of the employment market, which could lead to a serious shortfall in the numbers of migrant workers who will leave for work this year and in turn a drop in worker remittances.

Madam President,

During the heights of the COVID-19 pandemic, while approximately 1.5 million migrant workers from Sri Lanka were overseas, the Government of Sri Lanka accorded high priority towards addressing their concerns, providing food and medicines where required, and where possible, working with host countries to obtain legitimization of their status and medical facilities including testing for Covid-19. In addition, with use of  a web portal ‘Contact Sri Lanka’ created to guide and provide information and to assist in emergencies,  over  13,000  questions posed by Overseas Sri Lankans (OSLs) were  answered  by a dedicated  team,  ensuring  the  wellbeing  of  the  migrant  workers  spread  over 120  countries. Through intra-governmental coordination utilizing a ‘whole of Government’ approach we have managed to overcome the challenges and manage the health, quarantine and travel logistics aspects.

Notwithstanding the challenges it entailed both in terms of the logistics of movement and on the capacities on quarantine to the GOSL, as of 06 July 2020, of 14,006 Sri Lankans evacuated on repatriation flights over a period of approximately 2 months, 5125 (36.59%) were migrant workers. As we speak, Sri Lanka has sent at least one repatriation flight to almost all the destinations which have a large migrant worker presence, with multiple flights to Male, Dubai, Qatar, Dhaka and Singapore. Sri Lanka is also in the process of expediting the return of a near 40,000 migrant workers who have lost their jobs.

Madam President,

It must be noted that Sri Lanka has long recognized that the health of migrant workers is vital in the future management of migrant populations. In 2013, the Ministry of Health, in collaboration with the International Organization on Migration (IOM), launched the ‘National Migration Health Policy’, through which the IOM conducts migration health assessments and gives technical assistance in developing standards for health assessments for inbound and outbound migrants. One of the priority areas identified under the key strategic area of inbound migration had been the strengthening of core capacities and quarantine activities at Sri Lankan ports of entry. Sri Lanka also organized the 2nd Global Consultation on Migrant Health in Colombo from 21-23 February in 2017, partnering with the IOM and the WHO, which provided a platform for multi-sectoral dialogue and political commitment to enhance the health of migrants, focused on three thematic areas within a rights-based, people-centered, gender and equity framework. Additionally, Sri Lanka has continued to stress the need to pay due attention to migrant health as Sri Lanka successively chaired the Colombo Process from 2013-2017, and the Abu Dhabi Dialogue from 2016-2018. This provided the opportunity to design crucial regional modalities that could play a greater role in the post-COVID scenario, for the benefit of the migrant workers, as well as the sending and receiving countries.

In retrospect, we believe that if the issue of ‘migrant health’, which Sri Lanka had championed  received greater international attention at the time, there may have been a tangible difference in the management of the Covid-19 crisis, particularly with regard to undocumented workers, stranded in host countries, whose access to medical facilities remains limited.

Sri Lanka urges that greater regional and global efforts be channeled to ensure that ‘migrant health’ becomes a cornerstone in the future management of migrant populations, and the human right to health is secured for all, including migrants and refugees.

Thank you.

———————————–

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ප්‍රකාශය

මානව හිමිකම් කවුන්සිලයේ 44 වන සැසිවාරය

න්‍යාය පත්‍ර අංග 3: සංක්‍රමණිකයන්ගේ මානව හිමිකම් පිළිබඳ විශේෂ වාර්තාකරු සමඟ අන්තර් ක්‍රියාකාරී සංවාදය

2020 ජූලි 06

සභාපතිතුමියනි,

සංක්‍රමණිකයන්ගේ මානව හිමිකම් පිළිබඳ විශේෂ වාර්තාකරු විසින් ඉදිරිපත් කරන ලද වාර්තාව සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාවේ සතුට පළවෙයි.

ආර්ථික වර්ධනයට හා සංවර්ධනයට සංක්‍රමණික සේවකයින්ගේ දායකත්වය, ඔවුන්ගේ රටවලට වඩ වඩාත් වැදගත් වෙමින් පවතිනවා පමණක් නොව කලාපයේ සහ ජාත්‍යන්තරව ඉහළ යන සමාජ-ආර්ථික සංචලනයේ උත්ප්‍රේරකයක් ද වෙයි.

කොවිඩ්-19 අර්බුදය ලොවට ඉගැන්වූයේ සංක්‍රමණික චක්‍රය පුරාම වෙනස් කොට සැලකීමකින් තොරව සංක්‍රමණිකයන්ගේ සෞඛ්‍යය ගැටලු විසදීම සහතික කිරීම සඳහා සම්බන්ධීකරණ හා සාමූහික ප්‍රයත්න අවශ්‍ය බවය. කොවිඩ් -19 හි තවත් ප්‍රතිඵලයක් වන්නේ, රැකියා වෙළඳපොල හැකිලීමයි. එමඟින්, මේ වසරේ රැකියා සඳහා පිටත්ව යන සංක්‍රමණික සේවකයින්ගේ සංඛ්‍යාවේ බරපතල අඩුවක් හා සේවක ප්‍රේෂණවල  පහත වැටීමක් ඇති විය හැකිය.

සභාපතිතුමියනි,

කොවිඩ්-19 වසංගතයේ උච්චතම අවස්ථාවෙහිදී, ශ්‍රී ලංකාවෙන් සංක්‍රමණික ශ්‍රමිකයන් මිලියන 1.5 ක් පමණ විදේශගතව සිටි අතර, ඔවුන්ගේ ගැටළු විසඳීම, අවශ්‍ය අවස්ථාවල දී ආහාර හා ඖෂධ සැපයීම සහ හැකි සෑම අවස්ථාවකදීම ඔවුන්ගේ තත්ත්වවලට නීත්‍යානුකූලභාවය ලබාගැනීම සඳහා සහ කොවිඩ් -19 සඳහා පරීක්ෂා කිරීම ඇතුළුව වෛද්‍ය පහසුකම් ලබාගැනීම සඳහා සත්කාරක රටවල් සමඟ කටයුතු කිරීම කෙරෙහි ශ්‍රී ලංකා රජය ඉහළ ප්‍රමුඛතාවක් ලබාදුණි. ඊට අමතරව, මඟ පෙන්වීම සහ තොරතුරු සැපයීම සහ හදිසි අවස්ථාවල දී සහාය වීම සඳහා සකසන කරන ලද ‘ශ්‍රී ලංකාව අමතන්න’ යන වෙබ් ද්වාරයක් භාවිතා කිරීමත් සමඟ, විදේශගත ශ්‍රී ලාංකිකයින් විසින් ඉදිරිපත් කරන ලද ප්‍රශ්න 13,000 කට අධික සංඛ්‍යාවකට ඒ සඳහා කැපවූ කණ්ඩායමක් විසින් පිළිතුරු සපයමින් රටවල් 120ක් පුරා සිටි, සංක්‍රමණික සේවකයන්ගේ යහපැවැත්ම සහතික කරන ලදී. ‘සමස්ත රජයේ’ ප්‍රවේශයක් උපයෝගී කර ගනිමින් අන්තඃරාජ්‍ය සම්බන්ධීකරණය තුළින් අභියෝග ජයගෙන සෞඛ්‍ය, නිරෝධායන සහ සංචාරක සැපයුම් අංශ කළමනාකරණය කිරීමට අපට හැකි වී තිබේ.

ශ්‍රී ලංකාවට ගෙන්වා ගැනීමේ පහසුකම් හා නිරෝධායන ධාරිතාවයන් යන අංශ දෙක සම්බන්ධයෙන්ම ශ්‍රී ලංකා රජයට තිබූ අභියෝග නොතකා, 2020 ජුලි 06 වන විට, මාස 2කට ආසන්න කාලයක් පුරා මෙරටට ගෙන්වා ගැනීමේ ගුවන් ගමන් මගින් ශ්‍රී ලාංකිකයන් 14,006ක් එම රටවලින් ඉවත්කරගන්නා ලද අතර ඉන් 5125 (36.59%) සංක්‍රමණික සේවකයන් විය. ශ්‍රී ලංකාව විශාල සංක්‍රමණික සේවක පිරිසක් සිටින සියලුම ගමනාන්ත වෙත අවම වශයෙන් ආපසු ගෙන්වා ගැනීමේ එක් ගුවන් ගමනක් හෝ ක්‍රියාත්මක කර ඇති අතර මාලේ, ඩුබායි, කටාර්, ඩකා සහ සිංගප්පූරුව වෙත ගුවන් ගමන් කිහිපයක් ක්‍රියාත්මක කර ඇත. රැකියා අහිමිවූ සංක්‍රමණික කම්කරුවන් 40,000 කට ආසන්න සංඛ්‍යාවකගේ නැවත ශ්‍රී ලංකාවට පැමිණීමේ ක්‍රියාවලිය වේගවත් කිරීමට ද ශ්‍රී ලංකාව කටයුතු කරමින් සිටී.

සභාපතිතුමියනි,

සංක්‍රමණික ජනගහනයේ අනාගත කළමනාකරණය සඳහා සංක්‍රමණික සේවකයින්ගේ සෞඛ්‍යය ඉතා වැදගත් වන බවත් ශ්‍රී ලංකාව දිගු කලක් තිස්සේ එය හඳුනාගෙන ඇති බවත් සැලකිල්ලට ගත යුතුය. 2013 දී සෞඛ්‍ය අමාත්‍යාංශය, සංක්‍රමණ පිළිබඳ ජාත්‍යන්තර සංවිධානය (IOM) සමඟ එක්ව ‘ජාතික සංක්‍රමණ සෞඛ්‍ය ප්‍රතිපත්තිය’ දියත් කළ අතර එමඟින්, සංක්‍රමණ පිළිබඳ ජාත්‍යන්තර සංවිධානය සංක්‍රමණික සෞඛ්‍ය තක්සේරු කිරීම් සිදුකරන අතර රටතුළට පැමිණෙන හා රටින් පිටතට යන සංක්‍රමණිකයන් සඳහා සෞඛ්‍ය තක්සේරු කිරීම්වලට ප්‍රමිති සකස්කිරීමේ දී තාක්ෂණික සහාය ලබා දෙයි. රටතුළට පැමිණෙන සංක්‍රමණිකයන්ගේ  ප්‍රධාන උපායමාර්ගික අංශයක් යටතේ ප්‍රමුඛතාවය ලැබිය යුතු යැයි හඳුනාගෙන ඇති අංශයක් වූයේ ශ්‍රී ලංකවට ඇතුල්වන වරාය වල ප්‍රධාන ධාරිතාව සහ නිරෝධායන ක්‍රියාකාරකම් ශක්තිමත් කිරීමයි. සංක්‍රමණික සෞඛ්‍යය පිළිබඳ 2 වන ගෝලීය උපදේශනය 2017 පෙබරවාරි 21 සිට 23 දක්වා දිනවල දී කොළඹ දී පැවැත්වීමට සංක්‍රමණ පිළිබඳ ජාත්‍යන්තර සංවිධානය සහ ලෝක සෞඛ්‍ය සංවිධානය සමඟ හවුල් වී ශ්‍රී ලංකාව විසින් සංවිධානය කරන ලදී.  සංක්‍රමණිකයන්ගේ සෞඛ්‍යය නංවාලීම සඳහා බහු ආංශික සංවාද හා දේශපාලන කැපවීම ඇතිකිරීමට එමඟින්  වේදිකාවක් සපයන ලදී. අයිතිවාසිකම් පදනම් කරගත්, ජනතාව කේන්ද්‍ර කරගත්, ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය හා සමානාත්මතා රාමුවක් තුළ තේමාගත ක්ෂේත්‍ර තුනක් කෙරෙහි මෙහි දී අවධානය යොමු කරන ලදී.  මීට අමතරව, ශ්‍රී ලංකාව 2013-2017 සිට කොළඹ ක්‍රියාවලියේ ද,  2016-2018 සිට අබුඩාබි සංවාදයේ ද සභාපතිත්වය ඉසුලූ හෙයින්, සංක්‍රමණික සෞඛ්‍යය පිළිබඳව නිසි අවධානයක් යොමු කිරීමේ අවශ්‍යතාව ශ්‍රී ලංකාව දිගින් දිගටම අවධාරණය කර තිබේ. සංක්‍රමණික සේවකයින්ගේ මෙන්ම සේවකයන් යැවුම්කාර හා ලැබුම්කාර රටවල යහපත උදෙසා පශ්චාත් කොවිඩ් තත්ත්වය තුළ විශාල කාර්යභාරයක් ඉටු කළ හැකි වැදගත් කලාපීය ක්‍රමවේදයන් සැලසුම් කිරීමට මෙමගින් ඉඩප්‍රස්ථාව උදාකරලීය.
ප්‍රත්‍යෙක්ෂණය කිරීමේ දී, ශ්‍රී ලංකාව විසින් මූලිකත්වය ගෙන කටයුතු කළ  ‘සංක්‍රමණික සෞඛ්‍යය’ පිළිබඳ ප්‍රශ්නයට එකල ජාත්‍යන්තර අවධානය යොමු වූයේ නම්, කොවිඩ් -19 අර්බුදය කළමනාකරණය කිරීමේ  විශේෂයෙන් වෛද්‍ය පහසුකම් සඳහා ප්‍රවේශය සීමිතව පවතින සත්කාරක රටවල අතරමංව සිටින ලේඛනගත නොවූ කම්කරුවන් සම්බන්ධයෙන් පැහැදිලි වෙනසක් සිදුවිය යුතුව තිබූ බව අපි විශ්වාස කරමු.

සංක්‍රමණික ජනගහනය අනාගත කළමනාකරණයේ දී ‘සංක්‍රමණික සෞඛ්‍යය’ එහි පාදස්ථයක් බවට පත්වීම සහතික කිරීම සඳහා කලාපීය හා ගෝලීය වශයෙන් විශාල ප්‍රයත්නයක් දැරිය යුතු බවත්, සංක්‍රමණිකයන් සහ සරණාගතයින් ඇතුළු සැමට සෞඛ්‍ය සම්බන්ධයෙන් වූ මානව අයිතිය සුරක්‍ෂිත කළ යුතු බවත් ශ්‍රී ලංකාව තරයේ කියා සිටී.

ස්තුතියි.

———————————–

 

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அறிக்கை
மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு
நிகழ்ச்சி நிரல் 3: புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடல்
06 ஜூலை 2020

தலைவர் அவர்களே,

புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகள் குறித்து சிறப்பு அறிக்கையாளர் முன்வைத்த அறிக்கையை இலங்கை வரவேற்கின்றது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பானது, தமது சொந்த நாடுகளுக்கு மாத்திரம் முக்கியமானதாக அமையாமல், பிராந்தியத்திலும், சர்வதேச அளவிலும் உயர்ந்துள்ள சமூகப் பொருளாதார இயக்கப்பாட்டிற்கு ஒரு ஊக்கியாகவும் அதிகரித்து வருகின்றது.

புலம்பெயர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்பும் சுழற்சி முழுவதும் பாகுபாடின்றி அவர்களது ஆரோக்கியம் கவனிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கு ஒருங்கிணைந்ததும், ஒன்றிணைந்ததுமான முயற்சிகள் அவசியம் என்பதை கோவிட்-19 நெருக்கடி உலகுக்கு கற்பித்திருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். கோவிட்-19 இனால் ஏற்பட்டுள்ள மற்றுமொரு விளைவாக வேலைவாய்ப்பு சந்தையின் சுருக்க நிலை அமைவதுடன், இது இந்த வருடம் தொழில்களுக்குச் செல்லவுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கடுமையான பற்றாக்குறை ஏற்படுவதற்கு வழிவகுத்து, தொழிலாளர்கள் அனுப்பும் பணப் பாய்வில் குறைவை ஏற்படுத்தும்.

தலைவர் அவர்களே,

கோவிட்-19 தொற்றுநோயின் உச்ச நிலையின் போது, இலங்கையைச் சேர்ந்த சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளில் இருந்த நிலையில், அவர்களது கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும், தேவையான இடங்களில் உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும், கோவிட்-19 க்கான பரிசோதனை உள்ளடங்கலாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அந்தஸ்த்து மற்றும் மருத்துவ வசதிகளை சட்டப்பூர்வமாக்குவதற்காக பெற்றுக்கொண்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் இலங்கை அரசாங்கம் அதிக முன்னுரிமை அளித்தது. மேலும், 120 நாடுகளில் பரந்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் முகமாக, வழிகாட்டல்கள் மற்றும் தகவல்களை வழங்குவதற்காகவும், அவசரநிலைகளில் உதவுவதற்காகவும் உருவாக்கப்பட்ட ‘இலங்கையுடன தொடர்பு கொள்ளுதல்’ என்ற இணைய முகப்பைப் பயன்படுத்தி, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் எழுப்பிய 13,000 க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஒரு பிரத்தியேகக் குழு பதிலளித்தது. ‘முழுமையான அரசாங்கம்’ என்ற வகையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தி, உள்ளக அரசாங்க ஒருங்கிணைப்பின் மூலமாக சவால்களை சமாளிக்கவும், சுகாதாரம், தனிமைப்படுத்தல் மற்றும் பயண அளவீட்டு அம்சங்களை நிர்வகிக்கவும் முடியுமாக இருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் பண்டப் பரிமாற்றம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இது சவால்களைக் கொண்டிருந்தாலும், 2020 ஜூலை 06 ஆந் திகதிய நிலவரப்படி, நாட்டிற்கு மீள அழைத்து வரும் விமானங்களில் 14,006 இலங்கையர்கள் சுமார் 2 மாத காலத்திற்குள் வெளியேற்றப்பட்டதுடன், அவர்களுள் 5125 பேர் (36.59%) புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவர். நாங்கள் பேசுவது போல, கிட்டத்தட்ட பாரியதொரு புலம்பெயர்ந்த தொழிலாளர் இருப்பைக் கொண்ட அனைத்து இடங்களுக்கும் ஆகக் குறைந்தது மீள அழைத்து வருவதற்கான ஒரு விமானத்தையும், மற்றும் மாலி, துபாய், கத்தார், டாக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பல விமானங்களையும் இலங்கை அனுப்பி வைத்துள்ளது. தொழில் வாய்ப்பை இழந்த 40,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்புவதை விரைவுபடுத்தும் முயற்சிகளிலும் இலங்கை ஈடுபட்டு வருகின்றது.

தலைவர் அவர்களே,

புலம்பெயர்ந்த மக்களின் எதிர்கால நிர்வாகத்தில், அவர்களது ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதை இலங்கை நீண்ட காலமாக அங்கீகரித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இடம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்போடு இணைந்து, ‘தேசிய இடம்பெயர்வு சுகாதாரக் கொள்கையை’ 2013 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியதுடன், இதன் மூலம் சுகாதார மதிப்பீடுகளை முன்னெடுத்து, உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சுகாதார மதிப்பீடுகளுக்கான தரங்களை வளர்ப்பதில் இடம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்பு தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்றது. இலங்கையின் உள் நுழையும் துறைமுகங்களில் முக்கிய திறன்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதே உள்வரும் இடம்பெயர்வுக்கான முக்கிய மூலோபாயப் பகுதியின் கீழ் அடையாளங்காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும். பல்துறை உரையாடல்களுக்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான அரசியல் அர்ப்பணிப்புக்களுக்கும் ஒரு தளத்தை வழங்கும் முகமாக, இடம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, 2017 பெப்ரவரி 21 முதல் 23 வரையான காலப்பகுதியில், உரிமைகள் அடிப்படையிலான, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் பாலினம் – சமத்துவக் கட்டமைப்பு போன்ற மூன்று கருப்பொருள் பகுதிகளை மையமாகக் கொண்ட புலம்பெயர்ந்தோரின் உடல்நலம் குறித்த 2 வது உலகளாவிய ஆலோசனையையும் கொழும்பில் இலங்கை ஏற்பாடு செய்தது. மேலும், 2013 – 2017 வரை கொழும்பு செயன்முறைக்கும், 2016 – 2018 வரை அபுதாபி உரையாடலுக்கும் தொடர்ச்சியாக தலைமை தாங்கியமையின் காரணமாக, புலம்பெயர்ந்தோர் ஆரோக்கியத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களினதும், அனுப்புகின்ற மற்றும் பெற்றுக்கொள்கின்ற நாடுகளினதும் நலன்களுக்காக, கோவிட் தொற்றுக்குப் பிந்தைய சூழ்நிலையில், அதிக பங்கு வகிக்கக்கூடிய முக்கியமான பிராந்திய முறைமைகளை வடிவமைப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கியுள்ளது.

பின்னோக்கிப் பார்த்தால், இலங்கை வெற்றிபெற்ற ‘புலம்பெயர்ந்தோர் உடல்நலம்’ சார்ந்த பிரச்சினை அந்த நேரத்தில் அதிகமான சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தால், குறிப்பாக மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுக்கான அணுகல்களைக் கொண்டுள்ள பெற்றுக்கொண்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்கள் தொடர்பாக, கோவிட்-19 நெருக்கடியை நிர்வகிப்பதில் உறுதியான வேறுபாடுகள் இருந்திருக்கலாம்.

புலம்பெயர்ந்த மக்களின் எதிர்கால நிர்வாகத்தில் ‘புலம்பெயர்ந்தோர் ஆரோக்கியம்’ ஒரு மூலக்கல்லாக மாறுவதை உறுதிசெய்வதற்காகவும், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் உட்பட அனைவருக்கும் சுகாதாரத்திற்கான மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காகவும் அதிகளவிலான பிராந்திய மற்றும் உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை கேட்டுக்கொள்கின்றது.

நன்றி.

Related Links: https://www.mfa.gov.lk/44th-hrc-statement-06-june/